MARC காட்சி

Back
நடுகல் வீரன்
000 : nam a22 7a 4500
008 : 220906b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a நடுகல் வீரன்
300 : _ _ |a நடுகல் சிற்பம் |b சுமார் 3 ½ அடி உயரம் 2 ½ அடி அகலம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a

தேவன்குறிச்சி என்ற ஊர் மதுரைக்குத் தென்மேற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில், தே. கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறமாக அமைந்துள்ள மலைப்பகுதிக்கு அருகே உள்ளது. தேவன்குறிச்சி பகுதியில் நடந்தமுந்தைய தொல்லியல் ஆய்வில் இடைக் கற்காலத்திலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான ஆதாரமாக அவர்கள் உருவாக்கிய நுண்கற்கருவிகள் கிடைத்து வருகிறது. அதுபோல இரும்புக் கால மக்களும் செப்புக் கால மக்களும் அங்கு வாழ்ந்து வந்ததற்கான அடையாளமாக இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் தேவன்குறிச்சியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், கிளிஞ்சில் வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்ற பொருள்களும் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் இம்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

          இங்குள்ள சிவன் கோவில் வாயிலுக்கு முன்னே சுமார் 400 ஆண்டு பழமையான புலிகுத்திக்கல் காணப்படுகிறது. புலிகளிடமிருந்து பொது மக்களைக் காக்க உயிர் நீத்த வீரனுக்கு நிறுவப்பட்ட சிற்பமாகும். இதில் புலி ஒன்று முன்னங்கால் இரண்டையும் தூக்கி வீரனை தாக்க முயற்சிக்கிறது. அதேகணம் வீரன் தன் கூறிய ஈட்டியை புலியின் கழுத்துப்பகுதியில் பாய்ச்சுகின்றான். அவனுக்கு அருகே பெண் ஒருவர் உடன் நின்று உதவுவது போல காட்டப்பட்டுள்ளது. சிற்பங்கள் நேர்த்தியாகவும், எதார்த்தமாகவும் வடிக்கப்பட்டது இதன் சிறப்பாகும். பெரும்பாலும் இது போன்ற புலிகுத்தி நடுகல் சிற்பங்கள் தனிச் சிற்பங்களாக திறந்த வெளியில் அமைந்திருக்கும். இதில் சில நடுகற்கள் வழிபாட்டிலும் உண்டு. இங்கு இச்சிற்பத்திற்காக தனி சன்னதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். இச்சன்னதியின் மேற்புறத்தில் கருவறையில் உள்ள சிற்பத்தின் நகல் போலவே சிமெண்டில் புலிகுத்தி சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

520 : _ _ |a

தி.கல்லுப்பட்டி – பேரையூர் சாலை மிகப்பழமையான வணிகப்பாதை. இப்பாதையில் தி.கல்லுப்பட்டிக்கு அருகே அமைந்துள்ள ஊர் தேவன்குறிச்சி. இவ்வூருக்கு மேற்குப்பக்கத்தில் அமைந்த்துள்ள சிறிய குன்று அருகே புலியுடன் சண்டையிட்டு மடிந்த வீரன் ஒருவனுக்கு நடுகல் எழுப்பபட்டுள்ளது. பிற்காலத்தில் இத்தனிச்சிற்பத்திற்கு ஊர் மக்கள் சிறிய கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

653 : _ _ |a தேவன்குறிச்சி, நடுகல், நடுகல் வீரன், உசிலம்பட்டி, மதுரை, நடுகற்கள், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், வீர வழிபாடு, வீரக்கல், நினைவுக்கல், தேவன்குறிச்சி நடுகற்கள், தமிழ்நாடு
700 : _ _ |a க.த. காந்திராஜன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
752 : _ _ |a தேவன்குறிச்சி மலைபகுதி |b தே. கல்லுபட்டி மலை அடிவாரம் |c தேவன்குறிச்சி |d மதுரை |f பேரையூர்
905 : _ _ |a கி.பி.-17- ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 11.3954455920632
915 : _ _ |a 77.8567276262467
995 : _ _ |a TVA_SCL_001644
barcode : TVA_SCL_001644
book category : கற்சிற்பங்கள்
cover :
cover images TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-001.jpg :
Primary File :

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-001.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-002.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-003.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-004.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-005.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-006.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-007.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-008.jpg

TVA_SCL_001644/TVA_SCL_001644_தேவன்குறிச்சி_பேரையூர்_மதுரை-009.jpg